சர்வதேச திரைப்பட விழாவில் நடிகர் கமல்ஹாசனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!

Webdunia
திங்கள், 22 மே 2023 (07:31 IST)
தமிழ் சினிமாவில் பல்துறை வித்திகராக 60 ஆண்டுகளுக்கு மேலாக கோலோச்சி வருபவர் உலக நாயகன் கமல்ஹாசன். இடையில் அரசியலில் இறங்கியதால் நான்கு ஆண்டுகள் அவர் படம் எதுவும் ரிலீஸாகவில்லை. அதையடுத்து சமீபத்தில் ரிலீஸான அவரின் விக்ரம் திரைப்படம் தமிழ் சினிமாவின் பிளாக்பஸ்டர் ஹிட் படங்களில் ஒன்றாக அமைந்தது.

இதையடுத்து இப்போது இந்தியன் 2 படத்தில் நடித்து வரும் அவர் அடுத்து ஹெச் வினோத், மணிரத்னம், பா ரஞ்சித், வெற்றிமாறன் ஆகியோர் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு IIFA அபுதாபியில் வரும் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் நடக்க உள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்