அக்‌ஷராஹாசனுக்காக கமல் கொடுத்த கிறிஸ்துமஸ் பரிசு!

வெள்ளி, 30 டிசம்பர் 2022 (09:01 IST)
கமல்ஹாசனின் இளைய மகள் அக்‌ஷராஹாசன் விவேகம் உள்ளிட்ட சில தமிழ் படங்களிலும், இந்தி படங்களிலும் நடித்துள்ளார். சில படங்களில் உதவி இயக்குனராகவும் பணியாற்றியுள்ள இவர், இப்போது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் இப்போது சமூகவலைதளத்தில் அவர் தன்னுடைய தந்தை கமல்ஹாசன் தனக்கு அளித்துள்ள கிறிஸ்துமஸ் பரிசுடன் வெளியிட்டுள்ள புகைப்படம் கவனம் ஈர்த்துள்ளது. கமல்ஹாசன் அக்‌ஷராவுக்காக விலையுயர்ந்த ஹெட் செட் ஒன்றை பரிசாக அளித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்