மீண்டும் ஒரு தமிழருக்கு செவாலியே விருது: கமல்ஹாசன் வாழ்த்து!

சனி, 30 ஜூலை 2022 (09:20 IST)
மீண்டும் ஒரு தமிழருக்கு செவாலியே விருது: கமல்ஹாசன் வாழ்த்து!
ஏற்கனவே சிவாஜி கணேசன் உள்ளிட்ட ஒரு சிலருக்கு ‘செவாலியே’ விருது கிடைத்துள்ள நிலையில் தற்போது மீண்டும் தமிழர் ஒருவருக்கு ‘செவாலியே’ விருது கிடைத்துள்ளது
 
காலச்சுவடு என்ற இதழின் ஆசிரியர் கண்ணன் அவர்களுக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான ‘செவாலியே’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது
 
காலச்சுவடு என்ற இதழை கடந்த 1987 ஆம் ஆண்டு முதல் நடத்தி வரும் கண்ணன் இடையில் சில ஆண்டுகள் நிறுத்தினாலும் கடந்த 1994ம் ஆண்டு மீண்டும் தொடங்கினார். இலக்கியம், சுற்றுச்சூழல், பெண்ணியம் மொழிபெயர்ப்பு ஆகியவை இந்த இதழில் வெளியாகி வருகின்றன
 
இந்த நிலையில் காலச்சுவடு கண்ணனுக்கு செவாலியே விருது அறிவிக்கப்பட்டதை அடுத்து உலக நாயகன் கமல்ஹாசன் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது: தமிழின் மிகச் சிறந்த பதிப்பாளர்களுள் ஒருவரான காலச்சுவடு கண்ணன் அவர்களுக்கு பிரான்ஸ் அரசு வழங்கும் ‘செவாலியே’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கண்ணனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். தமிழைக் கெளரவிக்கும் ஃப்ரெஞ்சுக்குப் பாராட்டுக்கள்.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்