ரஜினி கன்னட நடிகர்: மறைமுகமாக தாக்கினாரா கமல்?

Webdunia
வெள்ளி, 6 ஏப்ரல் 2018 (13:46 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினியை ஒருசில திரையுலகை சேர்ந்தவர்களும், அரசியல்வாதிகளும் கன்னடர் என்று விமர்சித்து வருவது தெரிந்ததே. ஆனால் அவரை தனது 40 ஆண்டுகால நண்பர் என்று கூறிக்கொண்டு வரும் கமல்ஹாசனும் மறைமுகமாக ரஜினியை கன்னட நடிகர் என்று கூறி பதிவு செய்துள்ள டுவீட்டால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கன்னடர்களான நாகேஷ் தனது குரு என்றும் ராஜ்குமார், சரோஜாதேவி, அம்ரீஷ், ரஜினிகாந்த் ஆகியோர்கள் எனக்கு நெருக்கமானவர்கள் என்றும் கமல் தனது டுவீட்டில் பதிவு செய்துள்ளார். நாகேஷை இதுவரை யாரும் கன்னடர் என்று தமிழகத்தில் கூறியதே கிடையாது. முதல்முறையாக கமல் கூறி அந்த பெருமையை தக்க வைத்து கொண்டார்.

அதேபோல் ரஜினி கன்னடத்தில் நடித்தது வெகுசில படங்கள் மட்டுமே. அவர் தமிழில் தான் சூப்பர் ஸ்டார். இப்படியிருக்க கன்னட நடிகர்களின் பட்டியலில் வேண்டுமென்ற கமல், ரஜினியின் பெயரை சேர்த்து தனது துவேஷத்தை வெளிக்காட்டியுள்ளதாக பலர் டுவிட்டர் பயனாளிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இன்னும் சொல்லப்போனால் கமல், கட்சி ஆரம்பித்ததே ரஜினி அரசியலுக்கு வரக்கூடாது என்பதற்காகத்தான் என்றும் அவருடைய ஒவ்வொரு பேச்சிலும் மறைமுகமாகவோ அல்லது நேரடியாகவோ ரஜினியை தாக்க வேண்டும் என்ற குறிக்கோள் மட்டுமே இருப்பதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்