தெர்மோகோல்' அமைச்சரை கலாய்த்த கமல்ஹாசன்!

Webdunia
செவ்வாய், 25 ஏப்ரல் 2017 (04:34 IST)
கடந்த இரண்டு நாட்களாக நெட்டிசன்கள் மற்றும் மிமி கிரியேட்டர்களிடம் சிக்கி சின்னாபின்னாமாகி வரும் ஒரு சம்பவம் தெர்மோகோல் சம்பவம். வைகை அணையில் தண்ணீர் ஆவியாகாமல் இருக்க தமிழக அமைச்சர் ஒருவர் எடுத்த முயற்சி குறித்த கலாய்ப்புகள் எண்ண முடியாத அளவுக்கு சமூக வலைத்தளங்களில் பதிவு செய்யப்பட்டு வருகிறது.



 


இந்த நிலையில் 'அட்லி தயாரிப்பில் ஐக் இயக்கத்தில் உருவாகியுள்ள 'சங்கிலி புங்கிலி கதவ தொற' படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடந்தது. இந்த விழாவில் கலந்து கொண்ட கமல்ஹாசன், 'இந்த படம் ஒரு நல்ல முயற்சி. டிரைலரை பார்க்கும்போதே தெரிகிறது இந்த படம் ஒரு ஆவி படம் என்று. ஆனால் ‘ஆவி' கதையாக இருந்தாலும் தெர்மாகோல் போட்டு மூட முடியாது என்று நகைச்சுவையுடன் கூறினார்.

கமலின் இந்த கருத்துக்கு கைதட்டலால் அரங்கமே அதிர்ந்தது. ஏற்கனவே கமல் மீது தமிழக அரசியல்வாதிகள் குறிப்பாக ஆளும் கட்சியினர் கடும் அதிருப்தியில் இருக்கும் நிலையில் கமல் கூறிய இந்த கருத்து ஏதாவது பின்விளைவை ஏற்படுத்துமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
அடுத்த கட்டுரையில்