கமலின் ''விக்ரம்'' படத்திற்கு அதிக கட்டணம் வசூல்?

Webdunia
செவ்வாய், 31 மே 2022 (17:53 IST)
தமிழ் சினிமாவில்  நடிகர் கமல், விஜய்சேதுபதி, பகத்பாசில்,  நரேன், ஆகியோர்  நடிப்பில் உருவாகியுள்ள கேங்ஸ்டர் படம் விக்ரம்.

இப்படம் ஜூன் மாதம் 3 ஆம் தேதி உலகம் முழுவதும் தியேட்டரில் வெளியாகவுள்ள  நிலையில்,  இப்படத்திற்கு  சிறப்புக் காட்சிகளாக  அதிகாலை 4 மணி, 8 மணி காட்சிகள் வெளியாக உள்ளது.

அதிகாலை 4 மணிக்கு வெளியாகும் காட்சிக்கு ரூ.500 டிக்கேட் எனவும், காலை 7 மணி,8 மணிக்கு வெளியாகும் காட்சிக்கு ரூ.300  டிக்கெட் எனவும்,  என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன் அரசு  நிர்ணயித்த கட்டணங்கள் இருந்த நிலையில், பீஸ்ட், வலிமை ஆகிய படங்கள் ரிலீஸ்குக்குப் பின் இப்போது,  உயர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதே கட்டணம் விக்ரம் படத்திற்கு வசூலிகப்படுவதாகவும் புகார் எழுகிறது. இதற்கு கமல்ஹாசன் குரல் கொடுப்பாரா எனக் கேள்வி எழுந்துள்ளது.

அதிகக் கட்டணம் வசூலிக்கப்படுவதாக தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்