மீண்டும் மாறியது ‘மாமனிதன்’ ரிலீஸ் தேதி!

வெள்ளி, 20 மே 2022 (19:13 IST)
விஜய் சேதுபதி நடித்த ‘மாமனிதன்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி பல முறை அறிவிக்கப்பட்டது என்பதும் ஆனால் ஒவ்வொரு முறையும் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது என்பதை பார்த்து வருகிறோம்
 
இந்த நிலையில் கடைசியாக இந்த படம் ஜூன் 24ஆம்  தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது ஒரு நாள் முன்னதாக ஜூன் 23ஆம் தேதி அறிவிப்பு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது
 
இந்த படத்தின் ரிலீஸ் உரிமையை பெற்ற ஆர்கே சுரேஷ் இதனை தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். விஜய் சேதுபதி நடிப்பில் சீனு ராமசாமி இயக்கத்தில், இளையராஜா மற்றும் யுவன்ஷங்கர் ராஜா இணைந்து இசையமைத்த 'மாமனிதன் திரைப்படம் நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம் என்பது குறிப்பிடத்தக்கத்.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்