கமலை ஏன் சந்தித்தேன்? - மௌலி விளக்கம்

Webdunia
புதன், 30 நவம்பர் 2016 (12:47 IST)
நடிகர் கமலை இயக்குனர் மௌலி சமீபத்தில் சந்தித்தார். கமலை மௌலி இயக்கப் போவதாகவும், ஏவிஎம் அந்தப் படத்தை தயாரிப்பதாகவும், படத்துக்கு மெய்யப்பன் என பெயர் வைக்கப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாயின.

 
இதனை மௌலி மறுத்துள்ளார். கமலை நட்புரீதியாக மட்டுமே சந்தித்ததாகவும், படம் குறித்து எதுவும் பேசவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
 
சபாஷ் நாயுடு படத்தைத் தொடர்ந்து கமல் மௌலி இயக்கத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மௌலியின் பதில் ஏமாற்றம் அளித்துள்ளது.
அடுத்த கட்டுரையில்