கமல் ஒரு உண்மையான தீவிரவாதி. ஹாலிவுட் தயாரிப்பாலர் பேரி ஆஸ்பான்

Webdunia
திங்கள், 3 ஏப்ரல் 2017 (21:40 IST)
உலக நாயகன் கமல்ஹாசன் தீவிரவாதிகள் குறித்து தயாரித்து, நடித்து இயக்கிய 'விஸ்வரூபம்' படம் எந்த அளவுக்கு பிரச்சனைக்கு உள்ளானது என்பது அனைவரும் அறிந்ததே. இந்த படத்திற்கு ஏற்பட்ட பிரச்சனை காரணமாக தனக்கு ரூ.60 கோடி வரை நஷ்டம் என்று சமீபத்தில் ஒரு பேட்டியில் கமல் கூறியிருந்தார்



இந்த நிலையில் கமல்ஹாசனின் விஸ்வரூபம் படத்தை பார்த்த ஹாலிவுட் தயாரிப்பாளர் பேரி ஆஸ்பான் கமல்ஹாசனை பார்த்து ‘நீ தான் ஒரு உண்மையான தீவிரவாதி, அப்படியே பல காட்சிகளை ரியலாக கண் முன் கொண்டு வந்துவிட்டீர்கள்’ என பாராட்டியுள்ளார்.

கமல்ஹாசனின் 'சபாஷ் நாயுடு' படத்திற்கு பின்னர் பேரி ஆஸ்பானுக்காக கமல் ஒரு  ஹாலிவுட் படம் தொடங்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்