மிஸ்டர் கமல்ஹாசன்... இந்த வருஷம் பிக்பாஸ் நீங்க பண்ணவே முடியாது - மிரட்டும் மீரா!

Webdunia
செவ்வாய், 8 செப்டம்பர் 2020 (14:57 IST)
அழகி போட்டி நடத்துவதாக கூறி பல பெண்களிடம் பணமோசடியில் ஈடுபட்டதற்காக அவருக்கு வழங்கப்பட்ட அழகிப்பட்டத்தை திரும்ப பெற்று அவருக்கு பதிலாக இரண்டாம் இடம் பிடித்த சனம் ஷெட்டி என்ற நடிகைக்கு மிஸ் தென்னிந்திய அழகி பட்டத்தை வழங்க முடிவுசெய்தனர். இந்த விவகாரம் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில் இவர் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளார்.

இந்நிலையில் மீரா மிதுன் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்ததிலிருந்தே அவரால் பாதிக்கப்பட்ட சிலர் குற்றவாளியை ஏன் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைய அனுமதித்தீர்கள் என எதிர்ப்புகளை தெரிவித்து வந்தனர். இதையடுத்து சேரன் மீது அபாண்ட பழி சுமத்திய மீரா மிதுன் பிக்பாஸில் இருந்து வெளியேற்றப்பட்டார். தொடர்ந்து பல சர்ச்சையான விஷயங்களை குறித்து பேசி தனக்கு தானே பப்ளிசிட்டி கிரியேட் செய்து வருகிறார்.

அந்தவகையில் விஜய் , சூர்யா குறித்து அவதூறு பேசி பலரது மோசமான விமர்சனத்திற்கு ஆளானார். இந்த விவகாரத்தை தொடர்ந்து மீரா மிதுன் குறித்து பலரும் தங்களது கருத்துக்களை வெளியிட்டு அவரை திட்டி தீர்த்தனர். ஆனாலும், எதையாவது செய்து பப்ளிசிட்டி தேடி வருகிறார். அந்த வகையில் தற்ப்போது பிக்பாஸ் சீசன் 4 தொகுத்து வழங்கப்போகும் கமல் ஹாசனை திட்டி வீடியோ வெளியிட்டு மிரட்டியுள்ளார். அதில்,

"என்னிடம் தவறாக நடந்துகொண்ட சேரனுக்கு ஆதரவாக பேசிய நீங்கள்  ஒரு நடுவராக ஒழுக்கான தீர்ப்பை கொடுக்கவில்லை. எனவே, நீங்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்த சரியான ஆளே இல்லை என்று  நான் உங்கள் மீது வழக்கு தொடர்வேன்.  இந்த வருடம் உங்களால் பிக்பாஸ் நடத்தவே முடியாது என்று உதார் விட்டு மிரட்டியுள்ளார். இதனை கண்ட இணையவாசிகள்... உன்ன அடிச்சாலும் திருந்த மாட்ற... திட்டுனாலும் திருந்த மற்ற என்னதான் பிரச்சனை உனக்கு..? என கடுப்பாகி கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்