கழிவறையில் பிணமாக கிடக்கும் நடிகர் ஜெய் பிரகாஷ் - நெஞ்சை உலுக்கும் வீடியோ.

Webdunia
செவ்வாய், 8 செப்டம்பர் 2020 (14:36 IST)
கொரோனா காலத்தில் தொடர்ந்து திரைப்பிரபலங்கள் அடுத்தடுத்து மரணத்தை தழுவி வருகின்றனர். அந்தவகையில் ரிஷி கபூர், இர்பான் கான் , சுஷாந்த் சிங், சிரஞ்சீவி சர்ஜா , சேது என அடுத்தடுத்து நடிகர்களின் மரணம் ஏற்றுக்கொள்ளமுடியாத துக்கத்தை கொடுத்து வருகிறது.

இவர்களை தொடர்ந்து ஆறு, உத்தமபுத்திரன் போன்ற படங்களில் முக்கிய வேடம் ஏற்று நடித்த நடிகர் ஜெயபிரகாஷ் ரெட்டி இன்று (8.9.2020) அதிகாலை மாரடைப்பால் திடீரென மரணித்துள்ளார். 74 வயதாகும் இவர் பல்வேறு தெலுங்கு படங்களில் காமெடி நடிகராகவும், குணச்சித்ர நடிகராகவும் நடித்து புகழ்பெறுள்ளார். நடிகரின் மரண செய்தியை அறிந்த டோலிவுட் பிரபலங்கள் அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் சற்றுமுன் நடிகர் ஜெய் பிரகாஷ் கழிவறையில் பிணமாக விழுந்து கிடக்கும் வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி நெஞ்சை உறுக்கியுள்ளது. தூங்கிக்கொண்டிருந்த இவர் விடியற்காலையில் கழிவறைக்கு சென்ற போது மாரடைப்பு ஏற்பட்டு அங்கயே விழுந்து இறந்துவிட்டதாக தகவல்கள் கூறுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்