உன்னை அடிச்சுப் போட்டுட்டு பிக்பாஸ விட்டு போயிடுவேன்! தர்பீஸ் மேல் பாய்ந்த FJ! Biggboss Season 9

Prasanth K

புதன், 29 அக்டோபர் 2025 (14:22 IST)

கண்ணுக்கு இணையான தம்பிகளாக சமீபமாக வாட்டர்மெலனை பார்த்துக் கொண்ட சபரியும், எஃப்ஜேவும் இன்று வாட்டர்மெலன் திவாகருக்கு எதிராக நின்ற சம்பவம் பிக்பாஸ் வீட்டை பரபரப்பாக்கியுள்ளது.

 

பிக்பாஸ் வீட்டிற்குள் வாட்டர்மெலன் ஸ்டார் வந்தபோதே சபரி, எஃப்ஜே, கம்ருதீன் என எல்லாரிடமும் அவருக்கு சண்டை வந்தது. விஜே பாருவுடன் மட்டும் நட்பாக இருந்த அவர் நாளடைவில் சபரி, எஃப்ஜேவுடனும் நல்ல நட்பானார். ஆனால் இது விஜே பாருவுக்கு பிடிக்காமல் இருந்தது. 

 

இந்நிலையில் இன்று லைவில் என்ன நடந்ததென்றால் வாட்டர்மெலன் திவாகர் வழக்கம்போல சினிமா சீனை ரீக்ரியேட் செய்து நடிக்க வீட்டுக்குள் இருந்த கேமராவில் நின்றபோது கானா வினோத் பாடித் தொல்லை கொடுத்தார்.

 

இதனால் வெளியே உள்ள கேமராவுக்கு சென்ற வாட்டர்மெலன் திவாகர் சட்டையை கழட்டிவிட்டு நின்றார். இந்த வாரம் ஆர்மி ரூல் என்பதால் சட்டையை கழட்டக் கூடாது என வீட்டுத்தல ப்ரவீன் குறுக்கே வந்து கேமராவை மறைத்ததால், திவாகர் அவரை தள்ளினார். இந்த விஷயம் பிரச்சினையாக வெடிக்க, ப்ரவீனுக்காக நியாயம் கேட்க வந்த கனி, திவாகர் சட்டையில்லாமல் இப்படியெல்லாம் செய்வதை விமர்சிக்க, பதிலுக்கு திவாகர் கனி, எஃப்ஜே பழக்கம் குறித்து தவறாக பேசியதால் எஃப்ஜே கோபமானார்.

 

இந்த வாக்குவாதத்தில் எஃப்ஜே தன் சட்டையை பிடித்து அடிக்க வந்ததாக திவாகர் எல்லாரிடமும் கூறிக் கொண்டே இருந்ததால், கடுப்பான எஃப்ஜே ‘உண்மையாவே உன்னைய அடிச்சிட்டு பிக்பாஸ விட்டு போகப் போறேன்’ என பேச மேலும் பிரச்சினை பூதாகரமானது, இதில் திவாகருக்கு ஆதரவாக விஜே பாரு உள்ளே இறங்கி எஃப்ஜேவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட இன்றைய பிக்பாஸில் இதுவே பெரும் பிரச்சினையாக மாறியுள்ளது.

 

Edit by Prasanth.K

#Day24 #Promo2 of #BiggBossTamil

Bigg Boss Tamil Season 9 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason9 #OnnumePuriyala #BiggBossSeason9Tamil #BiggBoss9 #BiggBossSeason9 #VijaySethupathi #BiggBossTamil #BB9 #BiggBossSeason9 #VijayTV #VijayTelevision pic.twitter.com/yc9dcwXsVM

— Vijay Television (@vijaytelevision) October 29, 2025

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்