கடந்த மாதம் 23 ஆம்தேதி ஜப்பான் தலைநகர் டோக்கியோவின் ஒலிம்பிக் போட்டி தொடங்கியது.
இதில், சீனா, ஜப்பான், அமெரிக்கா போன்ற நாடுகள் பதக்கப்பட்டியலில் முன்னிலை வகிக்கின்றன.
இந்நிலையில், இந்தியாவைச் சேர்ந்த மீராபாய் பானு, பளுதூக்குதலில் வெள்ளிப்பதக்கமும், பிவி சிந்து, பேட்மிண்டனில் வெணகலப் பதக்கமும் வென்று சாதித்தனர். இன்று ஆடவர் ஹாக்கியில் இந்திய அணி 40 ஆண்டுகளுக்குப் பிறகு வெண்கலப் பதக்கம் வென்று சாதித்துள்ளது.
அதேபோல் ஒலிம்பிக் போட்டியில் ஆடவர் மல்யுத்தப் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த ரவிகுமார் தாக்கியா அரையிறுதியில் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறிய நிலையில் இன்று நடைபெற்ற போட்டியில் 58 கிலோ எடைபிரிவில் ரஷ்ய வீரர் ஜவுரை எதிர்கொண்டு 4.7 என்ற கணக்கில் தோல்வி அடைந்தார். இதன் மூலம் வெள்ளிப் பதக்கத்தை உறுதி செய்தார். அவருக்கு வாழ்த்துகளும் பாராட்டுகள் குவிந்து வருகிறது.
இதுகுறித்து நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில், சாலை வசதிகள் கூட இல்லாத கிராமத்தில் ஏழை விவசாயியின் மகனாகப் பிறந்து,சோதனைகள் பல கடந்து டோக்கியோ ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்திருக்கும் ரவிக்குமார் தஹியாவிற்கு என் மனம் கனிந்த பாராட்டுக்கள். உங்களால் தேசம் பெருமிதம் கொள்கிறது எனத் தெரிவித்துள்ளார்.