ஒரே நாளில் ரீ-ரிலீஸாகும் கமல்ஹாசன், ரஜினிகாந்த் படங்கள்! – மீண்டும் ஒரு போட்டியா?

Webdunia
ஞாயிறு, 26 நவம்பர் 2023 (11:46 IST)
நீண்ட கழித்து தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களான கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்தின் படங்கள் ஒரே நாளில் வெளியாக உள்ளது.



தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக திகழ்பவர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன். அந்த காலங்களில் இவர்கள் இருவரது படமும் ஒரே நாளில் வெளியாகி வசூலில் போட்டி போட்டுக் கொள்வது வாடிக்கையாக இருந்து வந்தது.

இந்நிலையில் தற்போது இவர்கள் இருவரது படமும் ஒரே நாளில் ரீ ரிலீஸுக்கு தயாராக உள்ளது. கே எஸ் ரவிகுமார் இயக்கத்தில் ரஜினிகாந்த், மீனா, சரத்பாபு, வடிவேலு உள்ளிட்ட பலர் நடித்த படம் ’முத்து‘. இந்தப் படம் தமிழ்நாட்டில் மட்டும் அல்லாமல் ஜப்பானிலும் வெற்றிகரமாக ஓடி ரஜினிகாந்துக்கு ஜப்பானில் ரசிகர்களை உருவாக்கிய படம்.

அது போல கமல்ஹாசன் எழுதிய தாயம் என்ற நாவலின் அடிப்படையில் 2001ம் ஆண்டு வெளியான படம் ஆளவந்தான். கமல்ஹாசன் கதை திரைக்கதை எழுதி நடித்த இந்தப் படத்தை சுரேஷ் கிருஷ்ணா இயக்கி இருந்தார். இந்த படம் அந்த சமயத்தில் பெரும் வெற்றியை தரவில்லை என்றாலும் திரைப்பட ஆர்வலர்களிடையே விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பைப் பெற்ற படமாக உள்ளது.

இந்த இரண்டு ஹீரோக்களின் கிளாசிக்கான இந்த இரண்டு படங்களும் வரும் டிசம்பர் 8 அன்று ரீ ரிலீஸ் ஆகிறது. நீண்டநாட்கள் கழித்து ரஜினிகாந்த், கமல்ஹாசன் படங்கள் ஒரே நாளில் வெளியாகும் நிலையில் இதற்கான வரவேற்பு எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்