கமல்ஹாசனின் இன்றைய நிகழ்ச்சிகள் யாவும் ரத்து! ஏன் தெரியுமா?

Webdunia
சனி, 20 மார்ச் 2021 (13:56 IST)
கமல்ஹாசனின் காலில் வீக்கம் ஏற்பட்டுள்ளதால் இன்றைய நிகழ்வுகள் யாவும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

சென்னையில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட கமல் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டுள்ளார். அங்கு இப்போது அவர் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். பல இடங்களுக்கு நடந்தும் ஆட்டோவிலும் சென்று அவர் மக்களை சந்தித்து பிரச்சாரம் மேற்கொண்டு வந்தார்.

இந்நிலையில் இன்று அவரது காலில் வீக்கம் ஏற்பட்டதால் அவரின் பிரச்சார நிகழ்ச்சிகள் யாவும் ரத்து செய்யப்பட்டுள்ளன. சமீபத்தில் அவர் காலில் அறுவை சிகிச்சை செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்