மநீம பொருளாளர் மீதான வரி ஏய்ப்பு புகார்- கமல் பதில்

வெள்ளி, 19 மார்ச் 2021 (19:00 IST)
ஊழலுக்கு எதிரான கட்சி என்றும் ஊழலை ஒழிக்கும் கட்சி என்றும் கமலஹாசன் தனது மக்கள் நீதி மய்யம் கட்சியை கூறிவரும் நிலையில் அவரது கட்சியைச் சேர்ந்த ஒருவர் வீட்டிலேயே நடந்த வருமான வரித்துறை ரெய்டில் ரூபாய் 80 கோடி கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது 
 
இது குறித்து கமல்ஹாசன் விளக்கம் அளித்தபோது ’இதில் தேர்தல் நேரத்தில் வியாதியாக கூட இருக்கலாம் என்றும்,ஆனாலும் அது தனி நபர் மீது வரும் ரெய்டு என்றும், என்னையும் மக்கள் நீதி மய்யத்தையும் அது பாதிக்காது அவர் தனிப்பட்ட முறையில் வருமான வரி ஏய்ப்பு செய்து இருந்தால் அதற்குரிய தண்டனை கிடைக்கும் என்றும் கூறினார்.
 
ஆனால் என்னை பொறுத்தவரை நானும் சரி மக்கள் நீதி மய்யம் கட்சியும் சரி ஒழுங்காக வரி கட்டி வருகிறோம். எனவே அவருடைய தனிப்பட்ட முறையிலான குற்றச்சாட்டுகள் என்னையோ, மக்கள் நீதி மய்யத்தையோ பாதிக்காது என்று கூறினார். ஆனால் அதே நேரத்தில் நானும் அவரும் பார்ட்னராக சேர்ந்து உருவாக்கிய நிறுவனம் ஆரம்பித்து ஒரு வருடம் தான் ஆகிறது அந்த ஒரு வருடத்தில் அபார லாபம் எல்லாம் கிடைக்க வாய்ப்பில்லை என்று அவர் தெரிவித்தார்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்