இந்தியனுக்கே விசாரணையா ? கமல் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டரால் சர்ச்சை !

சனி, 7 மார்ச் 2020 (10:55 IST)
இந்தியன் 2 படப்பிடிப்புத் தளத்தில் நடந்த விபத்தை அடுத்து நடிகர் கமலிடம் விசாரணை நடத்தப்பட்டதற்கு அவரது ரசிகர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

சமீபத்தில் நிகழ்ந்த ’இந்தியன் 2’ படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த விபத்து நடந்தபோது படப்பிடிப்பில் இருந்த அனைவரும் சம்மன் அனுப்பி விசாரணை செய்துவரும் நிலையில் சில நாட்களுக்கு முன்னர் கமல்ஹாசனிடம் அவர்கள் விசாரணை நடத்தப்பட்டது..

சுமார் 3 மணி நேரம் கமலஹாசனுடன் நடந்த விசாரணை குறித்து இதுவரை எந்த தகவலும் வெளிவரவில்லை. விசாரணைக்கு பின்னர் பேட்டியளித்த கமலஹாசன் விசாரணை நடத்தியது குறித்து ஒரு வார்த்தை கூட செய்தியாளர்களின் தெரிவிக்காமல் சம்பந்தமில்லாமல் பேட்டி அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

அதையடுத்து இப்போது மதுரை மக்கள் நீதி மய்யம் சார்பில் ஒரு போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அதில் ‘இந்தியனுக்கே விசாரணையா? வீணர்களே, வீரமும் நேர்மையும் நம்மவரின் சொத்து. இது தாண்டா தமிழனின் கெத்து. குனிந்து கும்பிடு போடும் முட்டாள் அரசியல்வாதிகளே முடிந்தால் களத்தில் வந்து மோது. இல்லை தமிழ்நாட்டை விட்டு ஓடு. நம்மவரை சீண்டினால் எவனையும் எதிர்ப்போம். எமனையும் எதிர்ப்போம்’ எனத் தெரிவித்துள்ளனர்.இந்த போஸ்டரால் இப்போது புதிய சர்ச்சை எழுந்துள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்