கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த தமிழ் திரைப்பட நடிகர் கைது

புதன், 4 மார்ச் 2020 (20:49 IST)
சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த நடிகர் ஒருவர் கல்லூரி மாணவி ஒருவருக்கு பழச்சாறில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
சென்னையை சேர்ந்த சூரியகாந்த் என்ற திரைப்பட நடிகர் அதிமுகவில் பேச்சாளராகவும் உள்ளார். இவரது மகன் விஜய் ஹரிஸ் என்பவர் நடிகராக உள்ளார். இவர் தற்போது ‘நாங்களும் நல்லவங்க தான்’ என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் விஜய் ஹரிஸ் கல்லூரி மாணவி ஒருவருக்கு பழச்சாறில் மயக்க மருந்து கொடுத்து அவரை பாலியல் வன்முறை செய்ததாக புகார் கூறப்பட்டுள்ளது. இந்த புகாரின் அடிப்படையில் திரைப்பட நடிகர் விஜய் ஹரிஸ்ஸை போலீசார் கைது விசாரணை செய்து வருகின்றனர் 
 
தமிழ் திரைப்பட நடிகர் கைது
கல்லூரி மாணவிக்கு மாதுளம் பழச்சாறில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்முறை செய்ததை விஜய் ஹரிஸ் ஒப்புக்கொண்டதாக தெரிகிறது. இதனை அடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மேலும் விசாரணை செய்து வருகின்றனர். திரைப்பட நடிகர் ஒருவர் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளது கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்