''கமல் ரசிகரான சந்தானம் '' - 'பில்டப்' பட முதல் லுக் போஸ்டர் ரிலீஸ்

திங்கள், 23 அக்டோபர் 2023 (19:11 IST)
தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் சந்தானம். இவர்  நடிப்பில் வெளியான தில்லுக்கு துட்டு 1 மற்றும் தில்லுக்கு துட்டு 2 ஆகிய இரண்டு படங்களும் அவருக்கு வெற்றியை ஈட்டித்தந்த படங்களாக அமைந்தன. 

இதையடுத்து இப்போது சந்தானம் 80ஸ் பில்டப் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை குலேபகாவலி மற்றும் மகளிர் மட்டும் ஆகிய படங்களை இயக்கிய கல்யாண் இயக்கியுள்ளார். இந்த படத்தின் மொத்த ஷூட்டிங்கையும் இயக்குனர் கல்யாண் 18 நாட்களில் முடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் விரைவில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், சந்தானம் நடிப்பில் உருவாகி வரும் பில்டப் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.

80 களின் காலகட்டத்தை பிரிதிபலிக்கும் வகையில், உள்ள இந்த போஸ்டர் கமல்ஹாசனின் ரசிகராக சந்தானம் நடித்துள்ளார். காமெடி படமாக உருவாகி வருவதால் இப்படம் நல்ல வரவேற்பை பெறும் என தெரிகிறது.

இந்த போஸ்டர் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

Naanum #KamalHaasan Rasigar than Da!!

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்