கட்சியை பிரபலமாக்க கமல் எடுத்த அதிரடி முடிவு

Webdunia
சனி, 24 பிப்ரவரி 2018 (14:23 IST)
நடிகர் கமல்ஹாசன் சமீபத்தில் தொடங்கிய 'மக்கள் நீதி மய்யம்' என்ற கட்சி தொடங்கப்பட்ட நாளில் அனைத்து ஊடகங்களிலும் தலைப்பு செய்தியானது. தொடக்க விழாவினை முன்னணி தொலைக்காட்சிகள் நேரடியாக ஒளிபரப்ப்பின.

ஆனால் கடந்த இரண்டு நாட்களாக இந்த கட்சி குறித்து எந்த பத்திரிகைகளிலும், தொலைக்காட்சியிலும் பெரிய செய்தியாக வெளிவரவில்லை. மேலும் கட்சியின் உறுப்பினர் சேர்க்கையும் கமல் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை

இந்த நிலையில் கமல் ஒரு அதிரடி முடிவு எடுத்துள்ளாராம். தான் ஒரு பெரிய நடிகராக இருந்தாலும் ஒவ்வொரு வீட்டின் வரவேற்பறைக்கு செல்லும் வகையில் தன்னை பிரபலப்படுத்தியது பிக்பாஸ் நிகழ்ச்சிதான். எனவே மீண்டும் பிக்பாஸ் 2 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி, அதன் மூலம் தனது கட்சியையும் அவ்வப்போது பிரபலப்படுத்த அவர் திட்டமிட்டுள்ளாராம். தனது முடிவினை விஜய் டிவியிடம் அவர் தெரிவிக்க, டிவி நிர்வாகத்தினர்களும் மகிழ்ச்சியாக ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. எனவே விரைவில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் 2 என்ற விளம்பரம் வரவாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்