கருணாநிதி பிறந்த நாளில் கமலின் விக்ரம் ரிலீஸ் ஏன்?

Webdunia
வியாழன், 26 மே 2022 (08:27 IST)
கமலிடம் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாளன்று விக்ரம் படம் வெளியாவது ஏன் என கேள்வி எழுப்பட்டது. 

 
கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்பட பலர் நடித்த விக்ரம் திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இந்த படம் வரும் ஜுன் மாதம் 3 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்த படத்துக்கும் அனிருத் இசையமைத்துள்ளார். 
 
கமல் நடிப்பில் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு ரிலீஸ் ஆகும் முதல் படமாக விக்ரம் உள்ளது. இந்த திரைப்படம் பேன் இந்தியா திரைப்படமாக ரிலீஸாகிறது. இதையடுத்து ரிலீஸ் தேதி நெருங்கியுள்ளதா படத்துக்காக ப்ரமோஷன்கள் செய்யப்பட்டு வருகின்றன. 
 
இந்நிலையில் சமீபத்தில் விக்ரம் திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் கமலஹாசன் கலந்து கொண்டனர். அப்போது கமலிடம் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாளன்று விக்ரம் படம் வெளியாவது ஏன் என கேள்வி எழுப்பட்டது. 
 
அதற்கு அவர், சினிமாகாரனாக கலைஞரைப் பற்றிப் பேச ஆயிரம் உள்ளது.  இது யாதார்த்தமான ஒரு நிகழ்வு. இதன் பின்னர் திட்டமிடல் எதுவும் இல்லை என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்