எத்தனை குண்டு போட்டாலும் இந்த ஜப்பானை அழிக்க முடியாதுடா’: கார்த்தியின் ‘ஜப்பான்’ டீசர்..

புதன், 18 அக்டோபர் 2023 (17:19 IST)
கார்த்தி நடிப்பில் ராஜு முருகன் இயக்கத்தில் ஜீவி பிரகாஷ் இசையில் உருவான ‘ஜப்பான்’ திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டீசர் சற்றுமுன் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. 
 
முதல் காட்சியிலேயே வங்கியில் கொள்ளை அடிக்கும் கொள்ளைக்காரராக ஜப்பான் என்ற கேரக்டரில் கார்த்தி நடித்துள்ளார். அவரை நான்கு மாநில காவல்துறையினர் தேடி வரும் நிலையில் அவர் காவல்துறையினரிடம் பிடிபட்டாரா அல்லது  கடைசி வரை தப்பித்து சென்றாரா என்பது தான் இந்த படத்தின் கதை. 
 
இந்த படத்தில் கார்த்தி ஜோடியாக அணு இமானுவேல் நடித்துள்ளார். மேலும் சுனில், விஜய் மில்டன் உள்பட பலர் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் இசையில் உருவான பாடல்கள் மற்றும் பின்னணி இசை இந்த படத்தில் அசத்தலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
இந்த படம் நிச்சயம் கார்த்திக் ரசிகர்களுக்கு ஒரு தீபாவளி விருந்தாக இருக்கும் என்று இந்த டீசரை பார்ப்பதில் இருந்தே தெரிகிறது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்