கல்கி திரைப்படத்துக்கு நாடு முழுவதும் வித்தியாசமாக ப்ரமோஷன் செய்யவுள்ள படக்குழு!

vinoth

வெள்ளி, 14 ஜூன் 2024 (08:14 IST)
கமல்ஹாசன்,பிரபாஸ் நடிப்பில் நாக் அஸ்வின் இயக்கும் கல்கி திரைப்படம் மிக பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இந்த படத்தில் கமல்ஹாசன் வில்லன் வேடத்தில் நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்காக அவருக்கு 150 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் அமெரிக்காவில் கடந்த ஆண்டு வெளியிடப்பட்டது. இந்த படத்தின் முதல் பாகத்துக்கான ஷூட்டிங் நடந்து முடிந்துள்ளது. கமல்ஹாசன் இந்த படத்தின் முதல் பாகத்திற்கான தன்னுடைய காட்சிகளை நடித்து முடித்துள்ளார் என சொல்லப்படுகிறது. ஜூன் 27 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து சமீபத்தில் படத்தின் டிரைலர் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்நிலையில் பேன் இந்தியா ரிலீஸாக வரும் இந்த படத்தினை நாடு முழுவதும் ப்ரமோஷன் செய்ய எல் ஈ டி திரைகள் பொருத்தப்பட்ட லாரிகளை ஏற்பாடு செய்து அவற்றை நாடு முழுவதும் ஓட்டிச் சென்று ரசிகர்களிடம் படம் பற்றி ஒரு கவனத்தை ஈர்க்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்