1000 கோடி ரூபாய் வசூலை நெருங்கும் கல்கி… அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு!

vinoth
திங்கள், 8 ஜூலை 2024 (14:34 IST)
பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், திஷா பதானி உள்ளிட்ட பலர் நடித்துள்ள கல்கி திரைப்படத்தை வைஜெயந்தி மூவிஸ் தயாரிக்க நாக் அஸ்வின் இயக்கியுள்ளார். இரண்டு பாகங்களாக உருவாகும் இந்த படத்தின் முதல் பாகம் கடந்த வாரம் உலகம் முழுவதும் ரிலீஸாகியுள்ளது.

இந்த படம் முதல் நாளில் 191.5 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்து இதுவரை இந்திய சினிமாவில் எந்த படமும் செய்யாத சாதனையை படைத்தது. அதன் பின்னர் சீராக ஒவ்வொரு நாளும் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து வருகிறது.

இந்நிலையில் இப்போது படம் மொத்தமாக 900 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. விரைவில் இந்த படம் 1000 கோடி ரூபாய் வசூலை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாகுபலிக்குப் பின்னர் தொடர்ந்து ப்ளாப் படங்களாகக் கொடுத்து வந்த பிரபாஸுக்கு இந்த படம் வெற்றிப்படமாக அமைந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்