தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும் தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் பல முன்னணணி நடிகர்களின் படங்களை விநியோகிப்பதுடன் படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார்.
தற்போது, மகிழ்திருமேனி இயக்கத்தில், உதய நிதி நடித்துள்ள படம் கலகத் தலைவன். இப்படத்தில் அவருடன் இணைந்து நிதி அகர்வால், பிக்பாஸ் ஆரவ், கலையரசன் உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர்.
ஆக்சன் பட பாணியில் உருவாகியுள்ள இப்படம் இன்று தமிழ் நாட்டில் பல்வறு மவட்டங்களில் உள்ள தியேட்டர்களில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த நிலையில், இப்படம் வெளியான இன்றே இணையதளத்தில் இப்படம் வெளியாகியுள்ளதால், படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து, நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது.