இந்தியன் 2 வில் இருந்து நான் நீக்கப்பட்டேனா?... ஷூட்டிங் தேதியோடு அறிவிப்பை வெளியிட்ட காஜல்!

Webdunia
வெள்ளி, 5 ஆகஸ்ட் 2022 (10:44 IST)
இந்தியன் 2 திரைப்படத்தை மீண்டும் தொடங்குவதற்கான வேலைகள் இப்போது நடந்து வருகின்றன.

கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ’இந்தியன் 2’ படம் தொடங்கப்பட்டு நான்கு ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் ரிலீஸாகவில்லை. படப்பிடிப்புத் தளத்தில் நடந்த விபத்துக் காரணமாக மூன்று பேர் உயிரிழந்ததை அடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அதன் பின்னர் இன்னும் தொடங்கப்படவில்லை. படம் சம்மந்தமாக லைகா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் இயக்குனர் ஷங்கருக்கு எதிராக வழக்கு தொடர்ந்தது. அதில் சுமூக முடிவு ஏற்பட்டு விட்ட நிலையில் விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் இருந்து காஜல் அகர்வால் நீக்கப்பட்டு விட்டதாகவும், அவருக்குப் பதில் தீபிகா படுகோன் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால் அதை மறுத்துள்ள காஜல் அகர்வால் ‘நான் இந்தியன் 2 ஷூட்டிங்கில் செப்டம்பர் 13 ஆம் தேதி முதல் கலந்துகொள்ள உள்ளதாக’ சமீபத்தில் அளித்த ஒரு நேர்காணலில் தெரிவித்துள்ளார். இதன் மூலம் சமூகவலைதளங்களில் பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்