அஜித் விஜய்… யார்மேல் க்ரஷ் – காஜல் அகர்வால் சொன்ன பதில்!

Webdunia
புதன், 17 பிப்ரவரி 2021 (16:47 IST)
நடிகை காஜல் அகர்வால் தமிழ் சினிமாவில் தன்னுடைய க்ரஷ் யார் என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார்.

இயக்குனர் வெங்கட் பிரபு முதல் முதலாக உருவாக்கியுள்ள வெப் சீரிஸாக லைவ் டெலிகாஸ்ட் (நேரடி ஒளிபரப்பு) வரும் பிப்ரவரி 12 ஆம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளது. இந்த தொடரில் காஜல் அகர்வால், வைபவ் மற்றும் கயல் ஆனந்தி ஆகியோர் நடித்துள்ளனர். இந்த வெப் சீரிஸ் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ளது.

இது சம்மந்தமான ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவரிடம் தமிழ் சினிமாவில் உங்களின் க்ரஷ் யார் என்ற கேள்விக்கு ‘அஜித் மற்றும் விஜய்’ எனக் கூறினார். ஆனால் ஒருவரைதான் சொல்லவேண்டும் என்று சொன்னபோது அதற்கு ‘விஜய்’ என சொல்லியுள்ளார். விஜய்யுடன் அவர் துப்பாக்கி, மெர்சல் மற்றும் ஜில்லா ஆகிய படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்