விரைவில் "கைதி 2" இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ட்விட்!

Webdunia
சனி, 26 அக்டோபர் 2019 (15:11 IST)
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் நேற்று வெளியான "கைதி" படத்தை பார்த்த ஆடியன்ஸ் பலரும் பாசிட்டீவ் விமர்சனத்தை தெரிவித்து வந்தனர். ஹீரோயின் , காதல் , பாடல் இப்படி எதுவுமே இல்லை சிறந்த கதையை மட்டுமே உள்ளடக்கி முழுக்க முழுக்க இரவில் படமாக்கப்பட்ட இப்படம் அமோக வெற்றியை கண்டுள்ளது. 


 
உச்ச நட்சத்திரமான நடிகர் விஜய்யின் பிகில் படத்துடன் போட்டிபோட்டுக்கொண்டு வெளியான கைதி கலெக்ஷனில் நல்ல வசூலையும் பெற்று வருகிறது.இந்நிலையில் தற்போது இப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டரில், இந்த வாய்ப்பை தந்த தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு மற்றும் நடிகர் கார்த்திக்கும் நன்றி னைவரது பாராட்டை பெற்ற டில்லி எனும் பாத்திரம் மீண்டும் வரும் என்று சூசகமாக கூறி இரண்டாம் பாகத்திற்கான ஹிண்ட்டை கொடுத்துள்ளார்.
 
இந்த பதிவை கண்ட ரசிகர்கள் பலரும் சிறந்த படைப்பாளிகளுக்கு எப்போதும் வெற்றி தேடி வந்து சேரும் வாழ்த்துக்கள் என மீண்டும் ஒரு வெற்றி வாகை சூடுவான் "கைதி" என பாராட்டி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்