விரைவில் தொடங்க உள்ள கைதி 2… இசையமைப்பாளர் யார்?

Webdunia
திங்கள், 4 ஜூலை 2022 (10:40 IST)
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அடுத்து விஜய் 67 படம் உருவாக உள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய்சேதுபதி மற்றும் பதக் பாசில் ஆகியோர் நடித்துள்ள படம் விக்ரம், இந்த படத்தில் சூர்யா ஒரு முக்கிய தோற்றத்தில் சில நிமிடங்கள் நடித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படம் இதுவரை எந்த ஒரு தமிழ் சினிமாவும் பெறாத வெற்றியைப் பெற்றுள்ளது. இந்நிலையில் அடுத்து அவர் நடிகர் விஜய்யை வைத்து படத்தை இயக்க உள்ளார். இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என சொல்லப்படுகிறது.

இந்த படத்துக்குப் பிறகு அவர் கைதி 2 திரைப்படத்தைத் தொடங்குகிறார். இந்த படத்தின் முதல் பாகத்துக்கு சாம் சி எஸ் இசையமைத்து இருந்தார். ஆனால் இப்போது லோகேஷோடு இசையமைப்பாளர் அனிருத் இணைந்து தொடர்ந்து பணியாற்றி வருகிறார். அதனால் கைதி 2 படத்துக்கு யார் இசையமைப்பார்கள் என்ற கேள்வி எழுந்தது. இப்போது சாம் சி எஸ் தரப்பில் கைதி 2 படத்துக்கு அவர்தான் இசையமைப்பார் என்று உறுதி செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்