கார்த்தி, நரேன், அர்ஜுன் தாஸ் மற்றும் ஜார்ஜ் மரியான் உள்ளிட்டவர்கள் நடிப்பில் 2019 ஆம் ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸானது லோகேஷின் இரண்டாவது படமான கைதி. அந்த தீபாவளிக்கு விஜய்யின் பிகில் திரைப்படமும் ரிலீஸானது. ஆனாலும் கைதி நின்று சண்டையிட்டு வெற்றி பெற்றது.
இந்நிலையில் கைதி திரைப்படம் மலேசியாவின் மலாய் மொழியில் ரீமேக் செய்யப்படவுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தில் கார்த்தி நடித்த கதாபாத்திரத்தில் டத்தோ ஆரோன் ஆஸிஸ் நடிக்க பந்த்வான் என டைட்டில் வைக்கபப்ட்டுள்ளது. இந்த படத்தில் இணைத் தயாரிப்பாளராக ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தின் டீசரை தற்போது ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் எஸ் ஆர் பிரபு வெளியிட்டுள்ளார். கைதி படத்தின் டீசரை அச்சு அசலாக மறு உருவாக்கம் செய்தது போல இந்த டீசர் உருவாகியுள்ளது. டிசம்பர் மாதம் இந்த படம் ரிலீஸாகவுள்ளது.