என்னுடைய அடுத்த படங்கள் இவைதான்… சிவகார்த்திகேயன் அப்டேட்!

vinoth

செவ்வாய், 9 செப்டம்பர் 2025 (16:20 IST)
அமரன் படத்தின் இமாலய வெற்றியை அடுத்து சிவகார்த்திகேயன் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடித்துள்ள ‘மதராஸி’ படம் செப்டம்பர் 5 ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸானது. கடந்த காலங்களில் அதிக எதிர்பார்ப்பு இல்லாமல் ரிலீஸாகும் சிவகார்த்திகேயன் ‘மதராஸி’ படம் அமைந்துள்ளது.

இந்த படம் மிகப்பெரிய வெற்றி என்றில்லாவிட்டாலும், தோல்வியும் இல்லை என்று வசூல் செய்துகொண்டிருக்கிறது. இதையடுத்து படத்தின் ரிலீஸுக்குப் பிறகு ப்ரமோட் செய்யும் விதமாக சிவகார்த்திகேயன் நேர்காணல்கள் கொடுக்க ஆரம்பித்துள்ளார்.

அப்படி அவர் அளித்த நேர்காணலில் தனது அடுத்த படங்களின் வரிசை பற்றி பேசியுள்ளார். அதில் “அடுத்து சிபி சக்ரவர்த்தியுடன் சேர்ந்து ஒரு படத்தில் நடிக்கிறேன். அதுதான் என்னுடைய அடுத்த படம். அதற்கடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் ஒரு படம். புஷ்கர் காயத்ரி ஆகியோரோடு இணைந்து ஒரு கதை விவாதத்தில் ஈடுபட்டு வருகிறேன்” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்