இந்த படத்தில் வித்யுத் ஜமால், பிஜு மேனன், ருக்மினி வசந்த் மற்றும் விக்ராந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். அனிருத் இசையமைத்திருந்தார். இந்த படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இந்த படம் முதல் ஐந்து நாட்களில் சுமார் 60 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் படத்தின் ரிலீஸுக்குப் பிறகு நேர்காணல் அளித்துள்ள முருகதாஸ் “மதராஸி படத்தின் க்ளைமேக்ஸில் முதலில் கதாநாயகி இறந்துவிடுவது போலதான் படமாக்கினோம். கதாநாயகி இறந்தாலும் மக்களைக் காப்பாற்ற ஹீரோ வருவானா என்ற கேள்வி எழுந்திருக்கும். ஆனால் அவன் வருவான். ஆனால் தன்னுடையக் காதலியை கதாநாயகனால் காப்பாற்ற முடியாமல் போனால் அது அந்த கதாபாத்திரத்தை பலவீனமாக்கும் என்பதால் மாற்றி எடுத்தோம்” எனக் கூறியுள்ளார்.