ரிஎண்ட்ரி கொடுக்கும் காதல் சந்தியா… ஆனால் சினிமாவில் இல்லை!

Webdunia
செவ்வாய், 18 ஆகஸ்ட் 2020 (11:20 IST)
காதல் படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை சந்தியா இப்போது மீண்டும் சீரியலில் நடிக்க உள்ளார்.

காதல் மற்றும் கூடல் நகரம் போன்ற படங்களில் நடித்து பிரபலமான நடிகை சந்தியா ஒரு கட்டத்தில் வாய்ப்புகள் கிடைக்காததால் கடந்த 2015 ஆம் ஆண்டு அவர் வெங்கட் சந்திரசேகர் என்பவரை  திருமணம் செய்துகொண்டார். அத்ன் பிறகு சினிமாவில் நடிக்காமல் ஓய்வில் இருந்தார். இந்தத் தம்பதியர்க்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் திருமணத்திற்குப் பின் பெரிதாகப் படங்களில் நடிக்காமல் இருந்த சந்தியா,  இப்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கண்மணி தொடரில் நடித்து வருகிறார்.

இந்த சீரியலில் விஜய்யின் நண்பரான சஞ்சீவ் மற்றும் பூர்ணிமா பாக்யராஜ் ஆகியவர்கள் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்