நவம்பர் 10 ஆம் தேதி புதுப்படங்களை ரிலீஸ் செய்யுங்கள்… தயாரிப்பாளர்களுக்கு அமைச்சர் கோரிக்கை!

வியாழன், 5 நவம்பர் 2020 (18:01 IST)
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு தளர்வுகளில் திரையரங்குகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிவிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாதம் முதலாக தியேட்டர்கள் மூடப்பட்டிருப்பதால் புதிய படங்கள் வெளியாகாமல் கிடப்பில் கிடப்பதால் திரைத்துறையினர் பெரும் நஷ்டத்தை சந்தித்து வந்தனர். இந்நிலையில் விரைவில் திரையரங்குகளை திறக்க வேண்டும் என திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் திரைத்துறையினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில் தற்போது நவம்பர் 10 முதலாக திரையரங்குகளை திறக்கவும், ஆனால் 50 சதவீதம் பார்வையாளர்களை மட்டுமே உள்ளே அனுமதிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் திரையரங்குகளை திறக்க பலரும் தயாராகி வரும் நிலையில், பாரதிராஜாவின் அறிவிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து பேசியுள்ள பாரதிராஜா “தீபாவளியை முன்னிட்டு திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் விபிஎஃப் எனப்படும் Virtual Print Fee யை நீக்கினால் மட்டுமே படம் வெளியிடப்படும்” என தெரிவித்துள்ளார். ஏற்கனவே திரையரங்குகள் பல மாதங்களாக மூடப்பட்டுள்ள நிலையில், பாரதிராஜாவின் அறிவிப்பால் பட வெளியீடுகள் மேலும் தள்ளி போகுமோ என ரசிகர்களிடையே அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இதுவரையில் அது சம்மந்தமான எந்தவொரு சுமூகமான முடிவும் எடுக்கப்படவில்லை. இதனால் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு ‘நவம்பர் 10 ஆம் தேதி புதிய படங்களை ரிலீஸ் செய்யுங்கள். எந்த கட்டுப்பாடுகளும் விதிக்காதீர்கள். விபிஎப் கட்டணம் பற்றி படங்கள் ரிலீஸான பின்னரே பேசுவது சரியாக இருக்கும்’ என தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்