ரம்யா பாண்டியன் சரியான பச்சோந்தி - வேல்முருகன் பரபரப்பு பேட்டி!

வியாழன், 5 நவம்பர் 2020 (14:14 IST)
பிக்பாஸ் வீட்டில் போட்டியாளராக பங்கேற்ற வேல்முருகன் தமிழ் சினிமாவின் பின்னணி பாடகராகவும், நாட்டுப்புற பாடகராகவும் தமிழ் மக்களிடையே பெரும் பிரபலமடைந்தவர். இதன் மூலம் கிடைத்த புகழை வைத்து பிக்பாஸ் வீட்டில் நுழைந்த வேல்முருகன் கடந்த வாரம் எவிக்ஷனில் வெளியேறினார்.

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பிரபலங்கள் தொலைக்காட்சிகளுக்கு பேட்டி கொடுப்பது வழக்கமான ஒன்று. அந்த வகையில் அண்மையில் பேட்டி ஒன்றில் பங்கேற்று பிக்பாஸ் அனுபவங்களை குறித்து பகிர்ந்துக்கொண்ட வேல்முருகன், " ரம்யா பாண்டியன் நேரத்திற்கு தகுந்தாற்போல் மாறும் பச்சோந்தி என கூறி அதிர்ச்சியளித்துள்ளார்.

அத்துடன் ரம்யா கமல் ஹாசன் வரும் அந்த இரண்டு நாளில் மட்டும் அவரிடம் நல்ல பெயரை வாங்க வேண்டும் என்பதற்காகவே தன்னுடைய இயல்பான குணத்தை அப்படியே மாற்றிக்கொள்வார். சுரேஷ் சக்கரவர்த்தியும் இதே போல் தான் ஆனால், அவர் கொளுத்தி போடுவதற்கு முன்னர் சொல்லிவிட்டு செய்வார் என அந்த பேட்டியில் வேல்முருகன் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்