ஜெயிலர் திரைப்படத்தின் சிங்கிள் பாடல்.. சூப்பர் அப்டேட் கொடுத்த சன்பிக்சர்ஸ்..!

ஞாயிறு, 2 ஜூலை 2023 (17:27 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர்' திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பது தெரிந்தது. மேலும் இந்த படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் அதற்கான போஸ்ட் ப்ராடக்ஷன் பணிகள் பாக நடைபெற்று வருகிறது. 
 
இந்த நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் சற்றுமுன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஜெயிலர்' படத்தின் சிங்கிள் பாடல் ப்ரோமோ வீடியோ நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று அறிவித்துள்ளது. இதனை அடுத்து நாளை மாலை 6 மணிக்கு இந்த பாடல் வெளியாகும் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
அனிருத் திசையில் நெல்சன் இயக்கத்தில் உருவாகிய இந்த படத்தில் ரஜினிகாந்த், சிவராஜ்குமார், மோகன்லால், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சுனில், ஜாக்கி ஷெராப், வசந்த் ரவி, விநாயகன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, உட்பட பலர் நடித்துள்ளனர்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்