காத்து வாக்குல ரெண்டு காதல்… உலக அளவில் வசூல் இவ்வளவா? வெளியான official தகவல்!

வெள்ளி, 27 மே 2022 (16:30 IST)
விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா நடிப்பில் உருவான காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் ஏப்ரல் 28 ஆம் தேதி ரிலீஸானது.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடித்துள்ள முக்கோண காதல் கதை “காத்து வாக்குல ரெண்டு காதல்”. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ட்ரெண்டாகியுள்ளது. இந்த படம் ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியானது. தமிழில் இந்த படத்தை உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார். இந்த படம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

இரண்டாம் பாதி முழுவதும் இழுவையாக இருப்பதாகவும், காதல் காட்சிகளோ நகைச்சுவை காட்சிகளோ ரசிகர்களுக்கு பிடிக்கும் விதமாக உருவாக்கப்பட வில்லை என்றும் விமர்சனங்கள் வைக்கப்பட்டன. ஆனால் படம் வசூல் ரீதியாக தயாரிப்பாளருக்கு லாபம் அளித்த படமாக அமைந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் வெளியாகி 25 நாட்களைக் கடந்துள்ள நிலையில் உலகளவில் இந்த படம் 60 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்