‘ரஜினி 169’ திரைக்கதை விவாதக் குழுவில் கே எஸ் ரவிக்குமார்?

Webdunia
திங்கள், 6 ஜூன் 2022 (15:38 IST)
நெல்சன் பீஸ்ட் படத்துக்குப் பிறகு ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர் 169 படத்தை இயக்க உள்ளார்.

பீஸ்ட் படத்தின் ரிலீஸூக்குப் பிறகு அதன் இயக்குனர் நெல்சன் மீது மோசமான விமர்சனங்கள் தற்போது எழுந்தன. ஆனாலும் தன்னுடைய அடுத்த படத்தின் இயக்குனர் நெல்சன்தான் என்பதில் ரஜினி உறுதியாக இருந்தார். அதையடுத்து தற்போது அந்த படத்தின் திரைக்கதை வேலைகளில் இயக்குனர் நெல்சன் மற்றும் அவரது குழுவினர் இறங்கியுள்ளனர்.

இந்நிலையில் நெல்சனின் திரைக்கதைக்கு சில ஆலோசனைகள் வழங்க கே எஸ் ரவிக்குமாரை படக்குழு அனுகியுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. கே எஸ் ரவிக்குமார் ரஜினியை வைத்து முத்து, படையப்பா மற்றும் லிங்கா ஆகிய படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்