“கேரக்டர் ரோல் கொடுத்தா கூட போதும்” - உதயநிதி ஸ்டாலின்

Webdunia
வெள்ளி, 19 ஜனவரி 2018 (20:52 IST)
‘பிரியதர்ஷன் சார் இயக்கத்தில் கேரக்டர் ரோல் கொடுத்தா கூட போதும்’ என தெரிவித்துள்ளார் உதயநிதி ஸ்டாலின்.

 
பிரியதர்ஷன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள படம் ‘நிமிர்’. இந்தப் படத்தில் நமீதா பிரமோத், பார்வதி நாயர் என இரண்டு ஹீரோயின்கள் நடித்துள்ளனர். சமுத்திரக்கனி வசனம் எழுதியிருப்பதோடு, முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார்.
 
இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. அப்போது பேசிய உதயநிதி ஸ்டாலின், “படப்பிடிப்புக்கு போகும்போது எங்களிடம் பாடல்களே இல்லை. பிரியதர்ஷன் சார் சொன்னதை அப்படியே செய்தேன். மகேந்திரன் சார் நான் நடித்த படங்களை பார்த்திருக்கிறேன் என்று சொன்னதும், ‘நிமிர்’ படத்தில் அவருடன் இணைந்து நடித்ததும் எனக்கு பெருமை. 
 
‘தெறி’ படத்துக்கு பிறகு பல படங்களில் நடிக்க அழைத்தும் மறுத்துவிட்ட மகேந்திரன் சார், பிரியதர்ஷன் படத்தில் நடித்தே தீருவேன் என நடிக்க வந்தார். சமுத்திரக்கனி சாருடன் 3 நாட்கள் ரொம்ப கஷ்டப்பட்டு புரண்டு சண்டை போட்டது மறக்க முடியாத அனுபவம். ஒளிப்பதிவாளர் ஏகாம்பரம் எனக்கு ரொம்ப ஆதரவாக இருந்தார். நான் நடித்த படங்களிலேயே மிகவும் அழகான  காட்சியமைப்புகள் இந்த படத்தில்தான். கருணாகரனுக்கும் எனக்கும் தான் நடிப்பில் போட்டி. 
 
எம்.எஸ்.பாஸ்கர், இயக்குனர் போதும் என்றாலும் ஒன் மோர் கேட்பவர். யாரையெல்லாம் நடிக்க வைக்கலாம் என பிரியதர்ஷன் சாருக்கு உதவியாக இருந்தார் சமுத்திரக்கனி. அவரே வசனமும் எழுதியிருக்கிறார். நான் நடித்த படங்கள் எதையும் பிரியதர்ஷன் சார் பார்த்ததில்லை. ஒரு நாள் திடீரென என்னை அழைத்து நீ தான் நடிக்கிற என்றார். எனக்கே கொஞ்சம் ஷாக். படம் முடிந்த பிறகு முதல் காட்சி பார்த்து விட்டு, அடுத்த படத்தில் ஒரு கேரக்டர் ரோல் இருந்தா கூட கூப்பிடுங்க, நடிக்க வரேன்னு அவரிடம் சொன்னேன்” என்று தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்