மகாத்மா காந்தியை இழிவுபடுத்தி பேசிய பிரபல நடிகர்.. நடிகர் சங்கம் நடவடிக்கை எடுக்குமா?

Mahendran

சனி, 11 அக்டோபர் 2025 (16:37 IST)
தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த், மகாத்மா காந்தியை இழிவுபடுத்தும் விதமாக கருத்துகள் தெரிவித்த காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 
மகாத்மா காந்தியை 'தேசத்தின் தந்தை' என்று அழைப்பது "அனைவருக்கும் அவமானம்" என்று ஸ்ரீகாந்த் கூறியதாக அந்த காணொளியில் உள்ளது. மேலும், அவர் நாதூராம் கோட்சேயை புகழ்ந்து, பேசியுள்ளார். அவரது இந்த தரக்குறைவான கருத்துகளுக்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
 
காந்தி குறித்த இத்தகைய அவதூறு கருத்துகளுக்கு எதிராக, காங்கிரஸ் சட்டமேலவை உறுப்பினர் பால்மூர் வெங்கட், ஐதராபாத் இணையக் குற்றப் பிரிவில் புகார் அளித்துள்ளார். ஸ்ரீகாந்த் மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
 
நடிகர் சங்கம் உள்ளிட்ட திரைத்துறை அமைப்புகள் இந்த பேச்சை கடுமையாக கண்டிக்க வேண்டும் என்றும், ஸ்ரீகாந்த் தனது கருத்துகளைத் திரும்ப பெற மறுத்தால், அவரை தொழில்முறை அமைப்புகளிலிருந்து நீக்க வேண்டும் என்றும் பால்மூர் வெங்கட் கோரிக்கை விடுத்துள்ளார்.
 
இந்த விவகாரம் குறித்து நடிகர் தரப்பில் இதுவரை எந்த விளக்கமும் இல்லை.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்