தேவரா படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ ரிலீஸ் அப்டேட்!

Webdunia
செவ்வாய், 2 ஜனவரி 2024 (07:06 IST)
தெலுங்கு திரையுலகின் முன்னணி இயக்குனரான கொரடலா சிவா இயக்கத்தில் உருவாகும் அடுத்த படத்தில் ஜூனியர் என்டிஆர் நடிக்கிறார். ஜூனியர் என்டிஆரின்  30 ஆவது படமான இதற்கு ‘தேவரா’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.  படத்தின் இசையமைப்பாளராக அனிருத் ஒப்பந்தமாகியுள்ளார். ஜான்வி கபூர் கதாநாயகியாக நடிக்க, சைஃப் அலிகான் வில்லன் வேடத்தில் நடிக்கிறார்.

கடந்த ஏப்ரல் மாதம் முதல் இந்த படத்தின் ஷுட்டிங் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த படம் கடலை கதைக்களமாகக் கொண்டு உருவாகி வருகிறது.இந்நிலையில் இந்த படத்தினை இரண்டு பாகங்களாக உருவாக்க உள்ளதாக படத்தின் இயக்குனர் கொரட்டாலா சிவா தெரிவித்துள்ளார். இந்த படம் இரண்டு பாகங்களாக ரிலீஸ் ஆகவுள்ளது. முதல் பாகம் 2024, ஏப்ரல் 5 ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் அறிமுக கிளிம்ப்ஸ் வீடியோ வரும் ஜனவரி 8 ஆம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்