திரைப்பட நடிகராகவும், சமையற் கலைஞராகவும் அறியப்படுபவர் மாதம்பட்டி ரங்கராஜ். ஜாய் கிரிசில்டா என்பவர் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் ரங்கராஜுக்கு ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றிய போது அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியதாக சொல்லப்படுகிறது. ரங்கராஜ் ஏற்கனவே திருமணமானவர். அவருக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.
அதையடுத்துப் பரபர திருப்பமான மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை ஏமாற்றிவிட்டதாக போலீஸில் புகாரளித்த ஜாய், தொடர்ந்து சமூகவலைதளங்களில் மாதம்பட்டி ரங்கராஜ் பற்றி கோபமான பதிவுகளைப் பதிவிட்டு வருகிறார். ஆனால் மாதம்பட்டி ரங்கராஜ் அதுபற்றி எதுவும் தெரிவிக்காமல் தொலைக்காட்சி ஷோக்களில் ஜாலியாக உலாவந்து கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் ஜாயின் மற்றொரு பதிவு அவரது கோபத்தை வெளிப்படுத்தும் விதமாக உள்ளது. அதில் “ஒருத்தன் உத்தமன் போல ஜாலியாக உலா வருகிறான். உன்னைப் போல மனிதாபிமானம் இல்லாத ஒருவனை யாரும் பார்த்ததில்லை. நீ எங்கே ஓடி ஒளிந்தாலும் கருவில் இருக்கும் குழந்தையின் சாபம் உன்னை நிழலாகத் தொடரும். ஒருநாளும் அது உன்னை விலகாது.” எனக் கூறியுள்ளார்.