சசிகுமாருக்கான கதையில் ஜெயம் ரவியை நடிக்க வைக்கும் சமுத்திரகனி

Webdunia
வெள்ளி, 8 ஜூலை 2016 (16:39 IST)
சசிகுமார் - சமுத்திரகனி கூட்டணி இனி அமையுமா என்பது சந்தேகமாகவே உள்ளது. நண்பர்களுக்குள் என்ன விரிசல் என்று தெரியவில்லை. சசிகுமாருக்காக உருவாக்கிய கதையில் இப்போது ஜெயம் ரவியை நடிக்க வைக்க முயற்சிக்கிறார் சமுத்திரகனி.


 
 
அப்பா படம் பரவலான கவனிப்பை பெற்றுள்ளதால் சமுத்திரகனி திருப்தியுடன் கூடிய மகிழ்ச்சியில் உள்ளார். ஜெயம் ரவிதான் அவரது அடுத்த டார்கெட். எப்படியும் அடுத்தப் படத்தை ஜெயம் ரவியை வைத்து பண்ண வேண்டும் என்பதில் அவர் உறுதியாக உள்ளார். கதையும் தயார்.
 
உண்மையில் இந்த கதை சசிகுமாருக்காக எழுதியதாம். என்ன நடந்ததோ, சசிகுமாரை விடுத்து ஜெயம் ரவிக்கு தூண்டில் வீசியுள்ளார் சமுத்திரகனி. எல்லாம் நல்லபடியாக நடந்தால் இந்த வருட இறுதியில் ஜெயம் ரவி படத்தை தொடங்குவேன் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் சமுத்திரகனி.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
அடுத்த கட்டுரையில்