இப்போது அவர் கைவசம் ஜீனி, கராத்தே பாபு மற்றும் பராசக்தி ஆகிய படங்கள் உள்ளன. இதில் ஜீனி படம் நிறைவடைந்துள்ள நிலையில் விரைவில் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பராசக்தி படத்தில் வில்லனாக நடிக்க, கராத்தே பாபு படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.
டாடா இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் கராத்தே பாபு படத்தின் அறிமுக முன்னோட்ட வீடியோ சில மாதங்களுக்கு முன்னர் வெளியானது. சட்டமன்றத்தில் நடப்பது போன்ற அந்த காட்சிகளின் தொகுப்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல கவனத்தை ஈர்த்து படத்துக்கு ஒரு நேர்மறையான எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளன. இந்நிலையில் இப்போது இந்த படம் பற்றி சுவாரஸ்யமானத் தகவல்கள் வெளியாகியுள்ளன.