குவாலிபயர் 1-ல் மோதப் போகும் அணிகள் எவை? கடைசியில் நடக்கப் போகும் ட்விஸ்ட்!

Prasanth Karthick

திங்கள், 26 மே 2025 (09:32 IST)

நடப்பு ஐபிஎல் சீசனில் ப்ளே ஆப் செல்லும் அணிகள் இறுதியாகிவிட்ட நிலையில் குவாலிபயர் 1 போட்டியில் மோதப் போகும் அணிகள் எவை என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

 

குவாலிபயர் 1 ல் மோதும் அணிகளில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறலாம் என்பதாலும், தோற்கும் அணி குவாலிபயர் 2ல் வெற்றி பெறும் அணியோடு மீண்டும் மோதி வெல்ல ஒரு வாய்ப்பு உள்ளதாலும் அனைத்து அணிகளும் குவாலிபயர் 1ல் தகுதி பெற ஆர்வம் காட்டுகின்றன.

 

தற்போதைய ஐபிஎல் சீசனில் குஜராத் டைட்டன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ஆர்சிபி, மும்பை இந்தியன்ஸ் ஆகிய நான்கு அணிகள் ப்ளே ஆப்க்கு தகுதி பெற்றுள்ளன. இதில் குஜராத் அணிக்கான போட்டிகள் முடிந்துவிட்ட நிலையில் 18 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. ஆனால் முதல் இரண்டு இடங்களுக்குள் செல்ல மும்பை, பெங்களூர், பஞ்சாப் அணிகளுக்கும் வாய்ப்புள்ளது.

 

இன்று நடக்கும் மும்பை இந்தியன்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் போட்டியில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றால் 19 புள்ளிகளுடன் முதல் இடத்தை அடையும். அதுவே மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றால், 18 புள்ளிகளுடன் அது முதல் இடத்தை பெறும். 

 

நாளைய போட்டியில் லக்னோ அணியை ராயல் சேலஞ்சர்ஸ் அணி வீழ்த்தினால் 19 புள்ளிகளுடன் முதல் இடத்தை அடையும். அவ்வாறு நடந்தால் குவாலிபயர் முதல் போட்டி ஆர்சிபி - மும்பை இந்தியன்ஸ் அல்லது ஆர்சிபி - பஞ்சாப் கிங்ஸ் என்ற வகையில் அமையும். 

 

ஒருவேளை ஆர்சிபி நாளைய போட்டியில் தோற்றால் முதல் குவாலிபயர் பஞ்சாப் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அல்லது மும்பை இந்தியன்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் என்ற வகையில் அமையும். 

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்