இயக்குனர் பொறுப்பைக் கையில் எடுக்கிறாரா ஜெயம் ரவி?… ஹீரோ இவரா?

vinoth
திங்கள், 21 அக்டோபர் 2024 (09:17 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஜெயம் ரவிக்கும் அவர் மனைவி ஆர்த்திக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இப்போது விவாகரத்துக்கு ரவி விண்ணப்பித்துள்ளார். ஆனால் ஆர்த்தி தரப்பில், தன்னிடம் கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக ரவி இந்த முடிவை எடுத்துள்ளார் என சொல்லப்பட்டது. இது சம்மந்தமாக விவாதங்கள் நடந்து தற்போதுதான் சர்ச்சைகள் அடங்கியுள்ளன.  இந்நிலையில் ஜெயம் ரவி தற்காலிகமாக தற்போது மும்பையில் குடியேறியுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் அவர் நடித்துள்ள பிரதர் படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் கவனம் செலுத்தி வருகிறார். இது மட்டுமில்லாமல் அவர் புதிதாக மூன்று படங்களில் நடிக்க கமிட்டாகியுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் விரைவில் ஜெயம் ரவி இயக்குனர் ஆகவுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

அந்த படத்தில் யோகி பாபு ஹீரோவாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே கோமாளி படத்தில் நடிக்கும் போது யோகி பாபுவை ஹீரோவாக வைத்து தான் ஒரு படத்தை இயக்க ஆசைப்படுவதாக ஜெயம் ரவி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்