வெளியானது ஜெயம் ரவியின் அகிலன் பட டிரைலர்!

Webdunia
ஞாயிறு, 5 மார்ச் 2023 (09:07 IST)
ஜெயம் ரவி நடித்துள்ள அகிலன் திரைப்படம் மார்ச் 10 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜெயம் ரவி நடிப்பில் வடசென்னையில் நடக்கும் குத்துச் சண்டை போட்டிகளை மையமாக வைத்து உருவான திரைப்படம் பூலோகம். இந்த படத்தை எஸ் பி ஜனநாதனின் உதவியாளர் கல்யாண் கிருஷ்ணன் இயக்கி இருந்தார். இந்த படத்துக்குக் கிடைத்த வரவேற்பை அடுத்து அதே கூட்டணி இரண்டாவது படத்தில் இணைந்துள்ளது. இந்த படத்துக்கு அகிலன் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் கடற்கரை பகுதிகளில் அதிகளவில் படப்பிடிப்பு செய்யப்பட்டுள்ளதால் ஒரு புதிய சிக்கல் உருவாகியுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தில் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் போலீஸ் வேடத்தில் நடித்துள்ளார். கடந்த ஆண்டே ரிலீஸ் ஆகவேண்டிய இந்த திரைப்படம் தாமதம் ஆகி வந்த நிலையில் அடுத்த வாரம் ரிலீஸ் ஆக உள்ளது.

இந்நிலையில் தற்போது இந்த படத்தின் மாஸ் ஆன டிரைலர் வெளியாகி இணையத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது. வெளியாகியுள்ள டிரைலர் படத்தின் மீதான ஆர்வத்தை அதிகமாக்கியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்