முதல் படத்திலேயே தயாரிப்பாளராகவும் களமிறங்கும் ஜேசன் சஞ்சய்!

vinoth

வியாழன், 8 மே 2025 (07:05 IST)
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். இவர் கனடாவில் சினிமா சம்பந்தமாக படிப்பு படித்து வந்த  நிலையில், குறும்படம் ஒன்றை இயக்கியிருந்தார். இப்போது லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்துக்காக சந்தீப் கிஷன் மற்றும் ஃபரியா அப்துல்லா ஆகியோர் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார்.

கடந்த ஆண்டு இந்த படத்தின் பூஜை நடந்த நிலையில் ஆண்டு இறுதியில் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. தற்போது படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று சந்தீப் கிஷனின் பிறந்தநாளை முன்னிட்டு மேக்கிங் வீடியோ ஒன்றைப் படக்குழு வெளியிட்டிருந்தது.

அதில் தயாரிப்பு நிறுவனமாக லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தோடு JSJ மீடியா எண்டர்டெயின்மெண்ட் என்ற நிறுவனத்தின் பெயரும் இடம்பெற்றிருந்தது. அது ஜேசன் சஞ்சயின் தயாரிப்பு நிறுவனம்தானாம். லைகா புரொடகஷன்ஸ் நிதியளிக்க, இந்த படத்தை முதல் பிரதி அடிப்படையில் ஜேசன் சஞ்சய்யே தயாரிக்கிறாராம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்