ஜேசன் சஞ்சய் முதல் படம்.. கிளாப் அடித்து துவக்கி வைக்கும் தளபதி விஜய்..!

Mahendran

செவ்வாய், 21 ஜனவரி 2025 (12:31 IST)
தளபதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் முதல் படம் குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ள நிலையில் இது குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தளபதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் வெளிநாட்டில் சென்று இயக்குனருக்கான படிப்பு முடித்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு லைக்கா நிறுவனத்தின் படத்தை தயாரிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

இந்த படத்தின் நடிக்கும் ஹீரோ தேடப்பட்டு வந்த நிலையில் இறுதியில் சந்தீப் கிஷான் ஹீரோவாக அறிவிக்கப்பட்டார் என்பது தெரிந்தது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் அனைத்தும் முடிவடைந்து படப்பிடிப்பு தொடங்கும் நிலைக்கு வந்துள்ளது.

ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் சந்தீப் கிஷான் நடிப்பில் உருவாகும் இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார், பிரவீன் கேஎல் படத்தொகுப்பு பணியை கவனிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பை முதல் கிளாப் அடித்து தளபதி விஜய் ஆரம்பித்து வைக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. இந்த தகவல் விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்