இவர்தான் ஜான்வி கபூரின் பாய் பிரண்ட்டா? சந்தேகங்களை கிளப்பிய புகைப்படங்கள்!

Webdunia
வியாழன், 17 ஜூன் 2021 (12:38 IST)
நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் தனது ஆண் நண்பருடன் கடற்கரையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என பலமொழிகளில் சூப்பர் ஸ்டார் நடிகையாக திகழ்ந்தவர் ஸ்ரீதேவி. அவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் துபாயில் இயற்கை எய்தினார். இதையடுத்து அவரின் மூத்தமகளான ஜான்வி கபூர் சினிமாவில் அறிமுகமாகி நடித்து வருகிறார். தற்போது பாலிவுட் படங்களில் மட்டும் அடுத்து தென்னிந்திய மொழி படங்களிலும் நடிக்க உள்ளார்.

இந்நிலையில் தன்னுடைய ரசிகர்கள் மத்தியில் எப்போதும் பேசுபொருளாக இருக்க விரும்பும் ஜான்வி தனது கவர்ச்சி புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றி வருகிறார். அந்த வகையில் இப்போது தனது ஆண் நண்பருடன் கடலில் குளித்து விளையாடும் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்களில் இருக்கும் நபர் யார் என்ற கேள்விகளால் ரசிகர்கள் இப்போது துளைத்தெடுக்க ஆரம்பித்துவிட்டனர். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்